பூங்காவனத்தின் சந்தாதாரராக இணைந்து கொள்ளுங்கள்

Sunday, August 23, 2015

21. திருமதி ஜெனீரா கைருல் அமான் அவர்களுடனான நேர்காணல்

இந்த நேர்காணல் ஞாயிறு வீரகேசரியில் வெளிவந்த திகதி - 2015.09.26

திருமதி ஜெனீரா கைருல் அமான் அவர்களுடனான நேர்காணல்

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

01. உங்கள் பிறப்பிடம், கல்லுhரி வாழ்க்கை பற்றிக் கூறுங்கள்?

மகாவலியின் நன்னீரும், தோணாக் கடல் நீரும் சங்கமிக்க, மீனினங்கள் பாட்டிசைத்துப் பரவசத்திலாழ்த்த, முத்துவிளை நிலமாய் பெயரெடுத்த கிண்ணியாவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டவள். ஓய்வு நிலை அதிபர; எம்.ஈ.எச்.எம். தௌபீக் - அபீபா உம்மா தம்பதியரின் சிரேஷ்ட புதல்வியாவேன். ஆரம்பக்கல்வி முதல் உயர;தரம் வரை திஃகிண்ணியா முஸ்லிம் மகளிர; மகா வித்தியாலத்தில் கல்வி கற்று, இப்பாடசாலையிலேயே ஆசிரியராகக் கடமையாற்றுகிறேன். பள்ளிப்பருவத்தில் பல போட்டிகளில் கலந்து வெற்றியீட்டிப் பரிசுகள் பெற்றுள்ளேன்.
 
02. உங்கள் குடும்பப் பின்னனி பற்றிக் குறிப்பிடுங்கள்?

எனக்கு 03 ஆண் பிள்ளைகளும் ஒரு பெண் பிள்ளையும் உள்ளனர். எனது கணவர் ஓர் ஆசிரியர். என் இலக்கியப் பயணத்திற்கு மிகவும் துணையாக இருப்பவர். அதனால்தான் என்னால் தொடர;ந்து எழுத முடிகிறது. எனது உடன்  பிறப்புக்கள் 05 பேர். இரு சகோதரிகளான நிகாரா, நாதிரா பட்டதாரி ஆசிரியைகளாவர். தம்பிமார;களான இமாம் கமநல சேவைத் திணைக்களத்திலும், ஜிப்ரி தேசிய நீர் வடிகால் சபையிலும், ரில்மி கணக்காளராகவும் கடமையாற்றுகின்றார்.

03. பல வருடங்களாக ஆசிரியப் பணியில் ஈடுபட்டுவரும் உங்கள் தொழில் அனுபவங்களைப் பகிர;ந்து கொள்வீர்களா?

ஆம்! ஆசிரியத் தொழில் புனிதமானது. எம்மை நாடி வரும் மாணவச் செல்வங்களுக்கு அறிவுப்பால் புகட்டுவதில் அதிக ஆர;வம் காட்டி வருகிறேன். ஏழை - பணக்காரன், படித்தவர; - பாமரர; என்ற பாகுபாடின்றி எல்லோரையும் சமனாக நோக்குகிறேன். இதனால் மாணவர;கள் என்னிடத்தில் மிக அன்பாகவும், பண்பாகவும் நடந்து கொள்கிறார;கள். நான் கற்பித்த மாணவர;களில் ஒரு மாணவன் நன்றாகவே சித்திரம் வரைவான். அவன் திறமையைப் பாராட்டினேன். ‘எங்க வீட்டில் சித்திரம் வரைந்தால் ஏச்சுத்தான் விழும்’ என்றான். உடனே அவன் தந்தையை வரவழைத்து, இம் மாணவனுக்குச் சிறந்த எதிர;காலமுண்டு. அவன் திறமையைத் தடுக்க வேண்டாம் என்றேன்.  அவன் தந்தை அதற்குச் சம்மதித்தார;. அன்றிலிருந்து பாடசாலை, மாவட்டம், மாகாணம், தேசிய ரீதியாகப் பல பரிசுகளை சித்திரப் போட்டிகளில் பெற்றான். இன்று சித்திரப் பாடத்தினால் பல்கலைக் கழகத்தில் உள்ளான். அவர;கள் என்னை மறந்துவிடவில்லை. இதுபோல் இன்னும் பல மாணவர;கள் பல்கலைக் கழகத்திலும் உள்ளனர், தொழில் வாய்ப்பையும் பெற்றுள்ளனர்.

 04. எழுத்துத் துறைக்குள் எப்போது, எப்படி வந்தீர்கள்? இதற்குக் காரணகர்த்தா யார்?

சிறு வயதிலிருந்து என்னிடம் வாசிப்புப் பழக்கம் உண்டு. தினகரன் சிறுவர் உலகம் பகுதியை மிக ஆவலாக வாசிப்பேன். அப்போது எனது தந்தை அவற்றுக்கு ஆக்கம் எழுதுமாறு கூறினார். எனது பொழுதுபோக்கு எனும் தலைப்பில் கட்டுரை எழுதி தினகரன் பத்திரிகைக்கு அனுப்பினேன். மறுவாரமே பிரசுரமாகியது. நுhற்றுக் கணக்கான வாசகர்கள் பாராட்டி எழுதினார்கள். வாசகர்களின் கைதட்டல்களே ஒரு எழுத்தாளனை ஊக்குவிக்கும் என்பார்கள். அவர்களது ஊக்குவிப்பே என்னை எழுதத் துhண்டியது. சகோதரர் அமீர் அலி சஞ்சிகைகளை வீட்டுக்குக் கொண்டு வருவார். அவற்றுக்கு எழுதுமாறும் கூறினார். அதற்கும் எழுதினேன். பாடசாலையில் படிக்கும் போது மர்ஹும்  கலைப்பிரியன் பரீட் மௌலவி, என் கவியாற்றலைப் பார்த்து சிந்தாமணிப் பத்திரிகைக்கு எழுதுமாறு விலாசத்தை எழுதித் தந்தார். அதனைத் தொடர்ந்து அவற்றிலும் அனேகமான ஆக்கங்கள் பிரசுரமாகின. கலைவாதி சேர், நிஸ்வான் சேர், அருளானந்தம் சேர் போன்றோர் எழுதுவதற்கும், நுhல் வெளியிடுவதற்கும் ஆலோசனை வழங்குகிறார்கள். திருமணத்தின் பின்னர் எனது கணவர், இலக்கிய உலகில் நிலைத்து நிற்க ஊக்கமும், உற்சாகமும் தந்து என்னைத் தொடர்ந்து எழுதுவதற்கு ஆதரவு வழங்குகிறார்.

05. உங்கள் குடும்பத்தினருக்கும் இலக்கியத் துறையில் ஈடுபாடு உண்டா?
         
எனது குடும்பத்தினர; அரசியலில் ஈடுபாடுள்ளவர்களாக இருந்தாலும், இலக்கியத்திலும் ஈடுபாடு காட்டுவதுண்டு. எனது பெரியப்பாமார்களான முஹம்மது அலி, மாகாத், மஹ்ருப் போன்றோர் ஆங்கிலப் பத்திரிகைகளில்  எழுதினார;கள். மற்றும் சாச்சாமார்களான மௌஜுத், பாறுக் தமிழ்ப் பத்திரிகைகளுக்கு எழுதினார்கள். வீட்டிலே நுhலகம் வைத்திருந்ததாக மூத்த எழுத்தாளர்கள், கல்விமான்கள் கூறுகிறார;கள். எனது தந்தை  தற்போது நேரம் கிடைக்கும்போது எழுதுகிறார;கள். நெஞ்சம் கவர;ந்த நாஸர;, சிறுவர; பாடல் போன்ற நுhல்களைப் பிரசவித்தார;. கலாபு+ஷணம், முதலமைச்சர;, சிரேஷ்ட பிரஜை முதலிய விருதுகள் பெற்றுள்ளதைக் குறிப்பிட்டுக் கூறலாம். மர;ஹும் கவிஞர; அண்ணல், கவிஞர; கஹ்ஹார;, அமீர; அலி, கலாநிதி கே.எம். இக்பால்,  உபைதுல்லாஹ் அதிபர;, அஷ்ரபா நுhர;தீன், சுஹைதா கரீம் போன்றோர; எமது குடும்பத்தைச் சேர;ந்தவர;கள் தான்.

06. இதுவரை வெளியிட்ட நுhல்கள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

பாலர; பாடல் (1991), பிரியமான சினேகிதி (சிறுகதைத் தொகுதி - 2009),  சின்னக் குயில் பாட்டு (சிறுவர் இலக்கியம் - 2009), 2010 இல் கேணிப்பித்தன் அருளானந்தம் (மாகாணக் கல்விப் பணிப்பாளர்) அவர;களின் உதவியுடன் மிதுஹாவின் நந்தவனம் (சிறுவர; கதைகள்), 3-5 மாணவர்களுக்கான ‘கட்டுரை எழுதுவோம்’ போன்ற நுhல்களை வெளியிட்டேன். முப்லிஹாவின் சிறுவர; கானங்கள் (2012), மழலையர; மாருதம் (சிறுவர் உளவியல் கட்டுரைகள் - 2013) இன்னும் பத்திரிகைகளில் பிரசுரமான கவிதை, கதைகள் ஏராளமாக உண்டு. அவற்றைப் பிரசவிப்பதற்கு இறைவனிடம் பிரார;த்திக்கிறேன்.



07. உங்கள் நுhல் வெளியீடுகளுக்கு உதவியாக இருந்தவர்கள் பற்றிக் கூறுங்கள்?

1991 ஆம் ஆண்டு அழுத்கம ஆசிரியர; பயிற்சிக் கலாசாலையில் பயிற்சி பெற்ற காலமது. சிறுவர் பாடல் நுhல் வெளியிடுவதற்காக எனதூர்  எழுத்தாளர்களிடமிருந்து ஆக்கங்களைத் தொகுத்தெடுத்து வெளியிடுவதற்கு   ஆயத்தமானேன். அன்று எமக்கு விரிவுரையாளராக இருந்த கலைவாதி கலீல் சேரிடம் இதுபற்றிக் கூறினேன். தொகுப்பாக வெளியிடாமல் சொந்தப் படைப்பாக வெளியிடுங்கள். பின்னால் மிகப் பிரயோசனமாக இருக்கும் என ஆலோசனை வழங்கினார். அதன்படி செயல்பட்டேன். 2012-முப்லிஹாவின் சிறுவர; கானங்கள், 2013ல், மழலையர் மாருதம் முதலிய நுhல்களையும் பிரசவித்தேன்.


08. நூல் வெளியீட்டு முயற்சியில் நீங்கள் வெற்றி பெற்றீர்களா?

ஆம்! வெற்றி பெற்றதாகவே கருதுகிறேன். இதுவரை வெளியிட்ட நுhல்கள் என்னிடம் மிகுதி இல்லாமல் முடிந்துவிடும். 02 ஆம் பதிப்பு போடுமாறு பலரும் என்னிடம் கேட்கிறார்கள். இரண்டாம் பதிப்பு போடுவதைவிடப் புதிதாக நுhல் வெளியிடுவது இலகுவாகத் தெரிகிறது.

09. உங்கள் ஆசிரியப்பணி அனுபவத்தில் இன்றைய மாணவர;களின் இலக்கியப் போக்கு, எழுத்துத் துறை நாட்டம் பற்றி என்ன சொல்லப் போகிறீர்கள்?

பாடசாலைகளில் பல போட்டி நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. அவற்றுள் தமிழ் மொழித் தினம், மீலாத் போட்டிகள் என்பன முக்கியமானவை. பேச்சு, க(வி)தை, கட்டுரை, ஆக்கத்திறன் வெளிப்பாடு, வாசிப்பு என்பவற்றுக்குப் பயிற்சி கொடுத்து கோட்டம், வலயம், மாவட்டம், மாகாணம் வரை மாணவர;களைப் போட்டிகளுக்கு மாணவர;களை அனுப்புகிறோம். இதனால் மாணவர;களின்  இலக்கியப் போக்கு சிறந்து காணப்படுகின்றது. பாடசாலைகளில் நுhலகம் உள்ளதால், மாணவர;களின் வயதிற்கு, தரத்திற்கேற்ப பல புத்தகங்கள் உள்ளன. அவற்றை வாசிப்பதாலும், எழுதுவதாலும் எழுத்துத்துறையில் நாட்டமேற்படுகிறது. தரமான ஆக்கங்களைப் பத்திரிகைக்கு அனுப்பி ஊக்குவித்து வருகிறேன். பல்கலைக்கழக மாணவர;கள் எனது நூலை ஆய்விற்காக எடுத்துச் செல்கிறார;கள்.

10. உங்கள் ஓய்வு நேரங்களில் எவ்வகையான அல்லது யாருடைய புத்தகங்களை வாசிக்கிறீர்கள்? உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர;கள் என்று யாரும் உண்டா?

உள் (வெளி) நாட்டு எழுத்தாளர்களின் நுhல்களை வாசிக்கிறேன்.  அன்பழகன் சேர;, அருளானந்தம் சேர், ஸர்புன்னிஸா ஹஸன், கலைவாதி சேர், ஜரீனா முஸ்தபா, சுலைமா சமி போன்ற எழுத்தாளர;கள் அதிகமான நூல்களை அன்பளிப்பாகவே வழங்கியுள்ளார;கள். அவற்றை ஓய்வு நேரங்களில் வாசிக்கிறேன். ஒவ்வொரு எழுத்தாளர;களும் வெவ்வேறு கோணத்தில் எழுதியுள்ளார;கள். எனவே அனேகமான எழுத்தாளர்களைப் பிடிக்கும்.

11. உங்களைக் கவர்ந்த பெண் எழுத்தாளர்கள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

லட்சுமி, அனுராதா ரமணன், பாலேஸ்வரி, ஜரீனா, சுலைமா, இன்ஷிரா போன்றோரின் நாவல்கள் அருமையானவை. அஷ்ரபா, ரிம்ஸா, ரிஸ்னா, ஸர்புன்னிஸா, ஸக்கியா, பாயிஸா, மஸூரா, றாஹிலா, பஹீமா ஆகியோரின் கவிதைகள் சிறப்பானவை. பெண்ணியம், சீதனம், பாலியல், இயற்கை, சமூகச் சீர்கேடுகள், போர்ச் சூழல் என்பவற்றைக் கருவாக வைத்து இலக்கியம் படைக்கிறார்கள். உண்மையில் பாராட்டுக்குரியது.

12. எழுத்துத்துறை சார்ந்த உங்கனது கொள்கை என்னவென்று சொல்லுங்கள்?

கலாசார மரபுகளை மீறாமல் இலக்கியம் படைக்க வேண்டும். வாசகர; மத்தியில் நல்ல கருத்துக்கள் சென்றடைய வேண்டும். பெண்கள் சுதந்திரமாக  எழுதுவதற்குக் குடும்பத்தில் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும். காத்திரமான படைப்புக்களை பிறமொழிகளில் மொழி பெயர்ப்புச் செய்ய வேண்டும். நாவல்கள் கூடுதலாக வெளிவர வேண்டும்.

13. இலக்கியத் துறைகளில் ஈடுபட்டுவரும் ஈழத்துப் பெண் எழுத்தாளர்கள் பற்றிய உங்களது பார;வை எப்படி இருக்கிறது?                

தொட்டிலை ஆட்டும் பெண்களின் கைகள்தான் தொல்லுலகையும் ஆள்கிறது. இன்று பெண்கள் பல்வேறு துறைகளிலும் முன்னேறிச் செல்கிறார;கள். இலக்கியத்துறை மட்டும் விதிவிலக்கல்ல. கணவன், பிள்ளைகள், குடும்பம், தொழில் என எத்தனையோ வேலைகளுக்கு மத்தியிலும் பெண்கள் எழுத்துத் துறையில் ஈடுபட்டு வருகிறார;கள்;. வீ(நா)ட்டுப் பிரச்சினைகள், வறுமை, காதல், சிறுவர; துஷ்பிரயோகம், சீதனம், பெண்ணியம் போன்ற கருத்துக்களைப் பேனா மூலம் உலகுக்கு வெளிச்சம் போட்டுக்காட்டுகிறார;கள். ஆயினும் பெண்கள் எனும் வரையரைக்குள்ளிருந்து விமர;சனங்களைக் கண்டு மனம் தளர;ந்துவிடுகிறார;கள். இதனால் பல பெண்கள் இலக்கியத் துறையிலிருந்து விலகிக் கொள்கிறார;கள். நன்றாக எழுதிய ஈழத்துப் பெண் எழுத்தாளர;களில் சிலர; காலப்போக்கில் காணாமல் போய்விடுகிறார;கள். எழுதும் பெண்களைக் குடும்பமும், சமூகமும் தட்டிக் கொடுக்க வேண்டும். அவள் மேலும் எழுதுவதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும். தொடர்ந்து இலக்கியம் படைக்கும் பெண்களை வாழ்த்துகிறேன்.

14. இணையத் தளங்களில் வெளிவரும் இலக்கியப் படைப்புகள் பற்றிய உங்களது கணிப்பு எவ்வாறு உள்ளது?
                           
இன்று பலர; இணையத்தளங்களில் இலக்கியப் படைப்புக்களை வெளியிடுவது வரவேற்கத்தக்கது. உள்நாடுகளில் மட்டுமல்ல, வெளிநாடுகளிலிருந்தும் இவற்றைப் பார;வையிட்டுக் கருத்துக்களைப் பரிமாறுவதற்கும், விமர;சனம் செய்வதற்கும் நல்லதொரு வாய்ப்பாக இது அமைகிறது. ஒரே நேரத்தில் பல்வேறு இலக்கியப் படைப்புக்களைப் பதிவு செய்யவும், பாதுகாக்கவும் முடிகிறது. இணையத்தள வசதி உள்ளவர;களால் பயன் பெறமுடியும். இல்லாதவர;களால் என்ன செய்ய முடியும்?

15. சிறுவர் இலக்கியத்திற்காகச் சிறந்த படைப்புக்களைச் செய்து வருகிறீர்கள். இதுபற்றிக் குறிப்பிடுங்கள்..
                         
ஏனைய படைப்புகளை விட, சிறுவர; இலக்கியம் சற்று வித்தியாசமானது. சிறுவர;கள் விளங்கக்கூடிய இலகு நடையில் எழுதப்பட வேண்டும். எழுதுபவர;கள் சிறுவர்களாக மாறி, அவர;களது உள்ளத்து உணர்ச்சிகளைப் புரிந்து, அதற்கேற்பவே எழுத வேண்டும். நான் எழுதிய காலப் பகுதியில் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரே சிறுவர் இலக்கியம் படைத்தார்கள். இப்போது அதன் வருகை அதிகரித்துள்ளமை கண்டு மகிழ்ச்சியடைகிறேன்.

16. இலக்கிய உலகில் உங்களுக்கு மறக்க முடியாதவர் அல்லது மறக்க முடியாத ஏதாவது சம்பவம் உண்டா? அது பற்றிக் குறிப்பிடுங்கள்?

இலக்கிய உலகில் மறக்க முடியாதவர்களும், மறக்க முடியாத சம்பவங்களும் அனேகமுண்டு. அவற்றில் எனது சின்னக் குயில் பாட்டு, பிரியமான சினேகிதி ஆகிய நுhல் வெளியீடுகள் பற்றி பத்திரிகையில் பிரசுரமானதைப் படித்துவிட்டு பேராதனை சர்புன்னிஸா அவர்கள் மடல் வரைந்திருந்தார்கள். உடனே அவர்களோடு தொடர்பு கொண்டேன். அன்றிலிருந்து எங்களது தொடர;பு வளர்ந்தது. அவர்களில்லம் சென்றபோது கணவனும், மனைவியும் இலக்கியத் தம்பதிகள் என்று புரிந்தது. ஹஸன் சேர் அவர்கள் சிறந்த கல்விமான், ஓராபி பாஷா பணிப்பாளர், பேச்சாளர், 14 நுhல்களை தமிழ், சிங்களத்தில் வெளியிட்ட எழுத்தாளர; முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சிக்காக அறிஞர் சித்தி லெப்பை, ரி.பி. ஜாயா போன்றோருடன் கைகோர்த்தவர். பண்பான, பணிவான இலக்கியத் தம்பதிகளின் தொடர்பு கிடைத்தமைக்கு மகிழ்ச்சியடைகிறேன்.
 
17. தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் பத்திரிகைகள், சஞ்சிகைகளின் ஆக்கங்களின் இலக்கியத்தரம் பற்றிய தங்களது கருத்து எவ்வாறு உள்ளது?

தற்போது சிறுவர;கள், இளைஞர;கள் மூத்தோர;கள் எனப் பலரும் சஞ்சிகை, பத்திரிகைகளுக்கு எழுதி வருகின்றனர;. அவை அத்தனையும் தரமானவை என்றோ, தரமற்றவை என்றோ கூறமுடியாது. பொருத்தமற்றதாக இருப்பின் தயாரிப்பாளர;கள் அவற்றைத் தரமுள்ளதாக மாற்றியமைத்துப் பிரசுரிக்க வேண்டும். அப்போதுதான் இலக்கியத்தின் தரம் சிறப்பாக அமையும்.

18. தாங்களது இலக்கியப் பணிகளினூடாக எதனைச் சாதிக்க விரும்புகிறீகள்?

உலகில் அநியாயம், பொய், ஊழல் ஆகியவை மறைந்து நீதி, நியாயம் உண்மை உயிர; வாழ வேண்டும். நான் மரணித்தாலும் என் இலக்கியங்கள் நிலைத்து நிற்க வேண்டும். எனது எழுத்துக்களால் யார; மனதும் புண்படக் கூடாது.

19. இதுவரை உங்களுக்குக் கிடைத்த பரிசுகள், பட்டங்கள், விருதுகள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

2008 ஆம் ஆண்டு கிண்ணியாப் பிரதேச சாகித்திய விழாவில் விருதும், இலக்கியத் தாரகைப் பட்டமும், திருகோணமலை நூலக அபிவிருத்தி சபை விருது, கிண்ணியா நகரசபை விருது
2010 ஆம் ஆண்டு கிழக்கு மாகாண சாகித்திய விருது, பொற்கிழி
2012 ஆம் ஆண்டு கொழும்பு தேசிய சிங்கள கவிஞர; சம்மேளனம் காவியஸ்ரீ பட்டமும்  விருது
2013 ஆம் ஆண்டு திருகோணமலை தமிழ்ச் சங்கம் சிறுகதை போட்டி 02 ஆம் பரிசு, கிண்ணியா கலை இலக்கிய மன்றம் கலைமதி விருது
2014 ஆம் ஆண்டு ஹிஸ்புள்ளாவின் நதியைப் பாடும் நந்தவனங்கள் விருது பொற்கிழி, ஒளியரசு - கட்டுரை போட்டி ஆறுதல் பரிசு, ஆசியர; பிரதீபா பிரபா விருது

20. இந்த நேர்காணல் மூலம் வாசகர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?

புதிய புதிய விடயங்களை தேடிக்கற்க வேண்டும். ஒருவருக்கு உயர;வு வரும் போது பாராட்டாமல் விட்டாலும் பரவாயில்லை. உபத்திரம் செய்ய நினைக்கக் கூடாது. எண்ணங்கள் நல்லதாக அமைய வேண்டும். சமூகத்துக்கு பயனுள்ள ஆக்கங்களை எழுத வேண்டும். நேர;காணல் மூலம் பல விடயங்களை பு+ங்காவனம் வெளிச்சத்துக்குக் கொண்டுவருவது பாராட்டுக்குரியது. இம்முயற்சி மேலும் உயர;ச்சி பெற வாழ்த்துகிறேன்!!!

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

No comments:

Post a Comment