இவர் பிரபல கலை இலக்கிய படைப்பாளியான வ. இராசையா அவர்களின் புதல்வியும், பிரபல படைப்பாளியான திரு மு. தயாபரன் அவர்களின் துணைவியும் ஆவார். சிறுவயது முதலே இலக்கிய முனைப்பு கொண்ட இவர் சிறந்த சிறுகதைகளையும், அதிகமான கட்டுரைகளையும் சஞ்சிகைகளில் எழுதிவருவதோடு தகவம் கதைஞர் வட்டத்திலும் செயலாளராக பணியாற்றி வருகிறார். அத்துடன் கொழும்பு தமிழ்ச்சங்கத்தின் வெளியீடுகளில் ஒன்றான ஓலை இதழின் ஆசிரியர் குழுவிலும் பணியாற்றி இருக்கிறார். மல்லிகை, ஞானம் போன்ற முன்னணி சஞ்சிகைகளில் தொடர்ந்து எழுதிவரும் இவர் குடை நடை கடை, மண்புழு மாமா வேலை செய்கிறார், அழகிய ஆட்டம், பச்சை உலகம் என நான்கு சிறுவர் கதை நூல்களையும், காலமாம் வனம் என்ற சிறுகதை நூலொன்றையும் வெளியிட்டுள்ளார். குடை நடை கடை என்ற சிறுவர் இலக்கிய நூல் தமிழ் எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் தமிழியல் விருது பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தவறான பாலியல் நடவடிக்கைகளால் எயிட்ஸ் தொற்றுக்கு உள்ளாகுபவர்கள் நோய்வாய்ப்பட்டு கண்ணீர் வடிக்கிறார்கள். எனவே ஒழுக்க சீர்கேடின்றி மனதாலும் உடலாலும் அனைவரும் புனிதர்களாக வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தி டிசம்பர் மாதம் 01 திகதி எயிட்ஸ் விழிப்புணர்வு தினத்தை சுட்டிக்காட்டி வாசகர்களுடன் கருத்துக்களை பரிமாறிக் கொண்டிருக்கிறார் ஆசிரியர்.
த. எலிசபெத், நிந்தவூர் ஷிப்லி, ஜுமானா ஜுனைட், ரொஷான் ஏ. ஜிப்ரி, பதுளை பாஹிரா, வெலிப்பண்ணை அத்தாஸ், பி.ரி. அஸீஸ், வி. விஜயகாந்த், மன்னார் அமுதன், சீனா உதயகுமார், ஏறாவூர் தாஹிர் ஆகியோரின் கவிதைகளும், எஸ்.ஆர். பாலசந்திரன், றாபி எஸ். மப்றாஸ், எம்.பி.எம். நிஸ்வான், சூசை எட்வேட் ஆகியோரின் சிறுகதைகளும் மருதூர் ஜமால்தீனின் உருவகக் கதையொன்றும் இடம்பெற்றுள்ளன. வழமை போல கவிஞர் ஏ. இக்பால் தனது இலக்கிய அனுபவங்களில் ஒரு பகுதியை இந்த இதழிலும் தந்திருக்கிறார். அதேவேளை நுணாவிலூர் கா. விசயரத்தினம் சிறந்த இலக்கிய கட்டுரை ஒன்றினைத் தந்திருக்கிறார். எம்.எஸ்.எம். ஸப்ரி, ரிம்ஸா முஹம்மத் ஆகியோர் நூல் மதிப்புரைகளை செய்திருக்கிறார்கள்.
மேலும் நூலகப் பூங்காவில் வௌ;வேறு எழுத்தாளர்கள் எழுதிய பதினாறு நூல்களைப் பற்றிய விபரங்கள் காணப்படுகின்றன. பூங்காவனம் பற்றிய வாசகர் கருத்துக்கள் இந்த இதழிலும் இடம்பெற்றிருக்கின்றன.
சுருக்கமாகச் சொல்லப் போனால் 48 பக்கங்களில் குறுகிய உள்ளடக்கத்தில் வாசகர்களுக்குத் தேவையான சகல அம்சங்ளையும் தாங்கி வெளிவந்திருக்கிறது பூங்காவனம் 11 ஆவது இதழ்.
சஞ்சிகை - பூங்காவனம் இதழ் 11
பிரதம ஆசிரியர் - வெலிகம ரிம்ஸா முஹம்மத்
வெளியீடு - பூங்காவனம் இலக்கிய வட்டம்
தொலைபேசி - 0775009222
மின்னஞ்சல் - poongavanam100@gmail.com
விலை - 80 ரூபாய்
பிரதம ஆசிரியர் - வெலிகம ரிம்ஸா முஹம்மத்
வெளியீடு - பூங்காவனம் இலக்கிய வட்டம்
தொலைபேசி - 0775009222
மின்னஞ்சல் - poongavanam100@gmail.com
விலை - 80 ரூபாய்
http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=1244:-11-&catid=14:2011-03-03-17-27-43&Itemid=62
No comments:
Post a Comment