பூங்காவனத்தின் சந்தாதாரராக இணைந்து கொள்ளுங்கள்

Wednesday, March 16, 2016

24. திருமதி. செல்வி திருச்சந்திரன் அவர்களுடனான நேர்காணல்

திருமதி. செல்வி திருச்சந்திரன் அவர்களுடனான நேர்காணல்

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்




01. உங்கள் பிறந்த இடம், கல்லூரி வாழ்க்கை என்பன பற்றிக் கூறுங்கள்?

பிறந்த இடம் யாழ்;ப்பாணம் - மானிப்பாய். கல்லூரி வாழ்க்கையைப் பற்றிக் கூறுவதென்றால் 05 ஆம் வகுப்பு தொடக்கம் பல்கலைக்கழகப் பிரவேசம் வரை கொக்குவில் இந்துக் கல்லூரியில் பயின்றேன். நான் படித்த காலகட்டத்தில் நன்கு படித்த முற்போக்கு சிந்தை கொண்ட அதிபரும், அந்த அதிபரின் போதனைகளால் கவரப்பட்ட ஆசிரியர்களும் இருந்தபடியால் கல்லூரி வாழ்க்கை மிகவும் சந்தோசமானதாகவும் சுதந்திர மனப்பான்மையை வளர்க்கக்கூடியதாகவும் அமைந்திருந்தது.


02. உங்கள் குடும்பத்தைப் பற்றிக் கூறுங்கள்?

எனது குடும்பத்தில் இரண்டு அண்ணன்மார்களுக்கும் இரண்டு தங்கையருக்கும் நடுவில் மூத்த பெண் குழந்தையாகப் பிறந்தேன். குழந்தைப் பருவத்திலேயே தாயை இழந்து தகப்பனின் பொறுப்பான, அன்பான அரவணைப்பில் வளர்ந்தேன். இடதுசாரி சிந்தனைக்குட்பட்ட எனது தந்தையினதும் சகோதரர்களுடையதும் முற்போக்குக்  கருத்தியல்கள் என்னை மிகவும் பாதித்தன. அதே கருத்தியலுடன் இணைந்து எனது பிற்காலத்து வாழ்க்கைச் செயற்பாடுகள் நடந்தேறின. அன்பும் பண்பும் இணைந்து வளர்க்கப்பட்டேன். அந்த வளர்ச்சியில் எனது தந்தையின் அறிவார்ந்த  வழிகாட்டல்கள் பெரும் பங்கு வகித்துள்ளமையை ஒரு பெரும் பேறாக நான் இன்று உணர்கிறேன்.


03. உங்கள் தொழில் அனுபவம் பற்றிக் குறிப்பிடுங்கள்?

பட்டதாரிப் படிப்பை முடித்த பின்பு படிப்புக்கு ஏற்ற தொழில் கிடைக்காதபடியால் மத்திய வங்கியில் ஒரு சாதாரண உத்தியோகத்தராக எனது தொழில் வாழ்க்கை தொடங்கியது. அதன்பின் இந்தியன் ஏயார்லைன்ஸ் விமான சேவையிலும், ஸ்ரீலங்கா ஏயார்லைன்ஸிலும் அடுத்தடுத்து உயர் பதவிகளில் பணியாற்றும் வாய்ப்புகள் அமைந்தன. எதிர்பாராதவிதமாக அவ்வேலையில் இருந்து நீக்கப்பட்டேன். அதற்கான காரணம் என்னவென்று இன்றுவரை எனக்குத் தெரியாதுளூ தெரிவிக்கப்படவுமில்லை.

இந்தத் தொழில் அனுபவங்களால் விரக்தி அடைந்த நான் வீட்டிலேயே சும்மா இருந்து நூல்கள் வாசிக்கலாம் என முடிவு செய்தேன். அப்பொழுது 'பெண்ணின் குரல்' என்ற சஞ்சிகை என் கண்ணில் பட்டது. ஆங்கிலத்தில் வெளிவந்த ஏழiஉந ழக றுழஅநn என்ற இதழில் வெளிவந்த கட்டுரைகள் அதில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தன. அந்த மொழிபெயர்ப்பில் பிழைகளைச் சுட்டிக்காட்டி அந்த நிறுவனத்தின் பொறுப்பாளராக இருந்த கலாநிதி குமாரி ஜயவர்தனவுக்கு ஒரு கடிதம் எழுதினேன். சமூகத்தில் பெண்ணின் இரண்டாம் பட்ச நிலையை  உணர்ந்து கொண்ட நான், அதன் விமோசனத்திற்கு என்ன செய்யலாம் என்று தீவிர யோசனையுடன் இருந்த பொழுதே பெண்ணின் குரலும், ஏழiஉந ழக  றுழஅநn உம் என் கைக்கு எட்டின. நான் கூறிய கருத்துப் பிழைகளை ஏற்றுக்கொண்ட குமாரி ஜயவர்தன என்னை மிகவும் சிலாகித்து பெண்ணின் குரல் ஆங்கில தமிழ் இதழ்களாகிய ஏழiஉந ழக றுழஅநnஇ பெண்ணின் குரல் ஆகிய இரு சஞ்சிகைகளின் ஆசிரியர் பதவிகளையும் ஏற்கும்படி கேட்டுக்கொண்டார். இத்துடன் தொடங்கியது எனது பெண்ணிலைவாதப் புரட்சி. வர்க்கமும் சாதியும் இணைந்த ஒரு கருதுகோளுடன் உள்ளார்ந்திருந்த எனது அறிவு நிலை பெண்ணிலை வாதத்தையும் அத்துடன் இணைத்துக்கொண்டு பயணிக்கத் தொடங்கியது.


04. உங்களது வளர்ச்சிக்கு அல்லது முன்னேற்றத்துக்குக் காரணமாக இருந்தவர்கள் பற்றிக் கூறுங்கள்?

வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் காரணமாக அனேகம் பேர் இருந்தாலும் இதன் முழுமுதற் காரணமாக எனது தந்தையையே குறிப்பிட வேண்டும்.

ஆழ்ந்த அறிவுத்தேடல், ஓயாத வாசிப்பு, சமத்துவம், சுயாதீனம் போன்ற கொள்கைகளைத் தன் வாழ்வில் கடைப்பிடித்து, எதையும் ஏன், எதற்காக, எப்படி என்பன போன்ற கேள்விகளுக்கு இடம் கொடுத்து எமது ஆளுமையை விருத்தியடையச் செய்ய வேண்டும் என்ற கருத்திலேயே தனது பிள்ளைகளை அவர் வளர்த்தெடுத்தார். எப்பொழுதும் எச்சந்தர்ப்பத்திலும் தான் சரி என்று ஏற்றுக்கொண்ட கொள்கைகளைக் கைவிடாது நேர்மைத் திறனுடன் வாழ்ந்த அவரின் வழிகாட்டல்,  பிற்காலத்தில் எனது வளர்ச்சிக்கும், நேர்மைக்கும், முன்னேற்றத்துக்கும் காரணமாக அமைந்தது. அடிப்படையான பல முற்போக்குக் கருத்தியல்களை அவரிடம் நான் கற்றுக்கொண்டேன். அடுத்ததாகக் கலாநிதி குமாரி ஜயவர்தனவை குறிப்பிடலாம். எனது பட்ட மேற்படிப்புக்குத் தூண்டியவர் இவரே ஆவார். அவரின் ஊக்கத்தினாலேயே முதுமாணிப் பட்டப் படிப்புக்கு விண்ணப்பித்தேன். பிற்பாடு எனது ஊக்கத்தினால் PhD பட்டம் பெற்றேன்.


05. தங்களது வேறுபட்ட பணிகள், சமூக சேவைகள் பற்றிக் குறிப்பிட்டுங்கள். எந்தக் காலகட்டத்திலிருந்து இவ்வகையான பணிகளைச் செய்து வருகின்றீர்கள்?

பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தின் பணிப்பாளராகக் கடமை ஏற்ற காலம் முதல் பல்வேறு பணிகளும் சமூக சேவைகளையும் செய்து வருகிறேன். பெண்களுக்கு அறிவூட்டல் மேற்கொள்வதே எனது முக்கிய குறிக்கோளாக இருந்தது. சாதி நிலையில், வர்க்க நிலையில் தாழ்ந்த பெண்கள், அகதிகள், போரால் பாதிக்கப்பட்ட பெண்கள் போன்றோருக்குப் பயிற்சி அளித்தல், அவர்களை வலுவூட்டல் என எனது பணிகள் விரிவடைந்தன.

1983ஆம் ஆண்டு தொடக்கம் இவ்வகையான பொதுப் பணிகளில் ஈடுபட்டு வருகிறேன்.


06. பொதுப் பணியில் ஈடுபட்ட உங்கள் அனுபவத்தில் மனதை ஈர்த்த  சங்கதிகள் சிலவற்றைச் சொல்லுங்களேன்?

பொதுப் பணியில் ஈடுபட்ட எனக்கு மனதை ஈர்த்த சம்பவங்கள் பல இருந்தாலும் ஒன்றை மட்டும் கூறுகிறேன். 1983 ஆம் ஆண்டில் முற்பகுதியில் நானும் என்னுடன் சேர்ந்து வேலை செய்த குமாரி ஜயவர்தனவும் பாலியல் தொழிலாளர் சிலரைச் சந்திக்கச் சென்றோம். எப்படி அவர்களுக்கு உதவலாம் என்பதை ஆராய்வதே எமது குறிக்கோள். பத்துப் பன்னிரண்டு பேர் கொழும்பு நகரத்தின் ஓர் ஒதுக்குப் புறத்தில் ஒன்றாக, ஒரு குழுவாக இருந்தார்கள். அவர்கள் செய்யும் தொழிலைப்பற்றி எந்தவித வெறுப்புணர்ச்சியும் அவர்களுக்கு இல்லை. ஊதியத்துக்கு உடலால் வேறு விதத்தில் உழைக்கிறோம் என்ற மனப்பான்மையே அவர்களிடமிருந்தது. ஆனால், அங்கு மகிழ்ச்சி இல்லை. திருப்தி இல்லை. போட்டி பொறாமை உணர்ச்சிகளுக்கு அங்கு இடமில்லை. கூட்டுணர்ச்சியே அங்கு மேலோங்கி இருந்தது.

எல்லோரும் அங்கே சமம். உயர்வு தாழ்வு, சாதி பேதம் இருக்கவில்லை. சிங்கள, தமிழ், முஸ்லிம் பெண்கள் அங்கு இருந்தார்கள். ஆனால், யாரும் தேசியம் பேச முற்படவில்லை. நீ என்னவள்  இல்லை என்று யாரும் கூற முற்படவில்லை. Pயசவைல ழக  ளுவயவரள என்ற அரசியல் சொல்லாடல் அங்கு இரண்டு மொழிகளுக்கு இருந்தது. சிங்களத்திலும் தமிழிலும் பேசினார்கள். ஏன் இந்தத் தொழிலைத் தேர்ந்தெடுத்தார்கள் என்ற கேள்விக்கு, ஷஷவறுமை, கணவனால் கைவிடப்பட்டமை, பாலியல் பலாத்காரத்துக்கு உட்பட்டமை, அதனால் கைக்குழந்தையுடன் சமூகப் பிரஷ்டம் செய்யப்பட்டமை, தாயினால் அரங்கேற்றப்பட்டமை|| என்பவற்றை முக்கிய காரணங்களாக முன்வைத்தார்கள். இந்தத் தொழிலைவிட்டு விடுவீர்களா என்று கேட்டோம். ஒரு தொழிலும் இருக்க இடமும் கிடைத்தால் விட்டுவிடத் தயாராய் இருப்பதாகச் சொன்னார்கள். இதன் அடுத்த கட்டமாக, அவர்களில் பத்துப்  பேரை எங்கள் நிறுவனத்துக்கு வரச் சொல்லி வைத்திய பரிசோதனை செய்து நோய் ஒன்றும் இல்லை என்று உறுதிப்படுத்தி, வீட்டு வேலைக்குப் பயிற்சி அளித்து கூட்ட துடைக்க, நிலம் Pழடiளா பண்ண, (கிரைண்டர் முதலான) சமையல் உபகரணங்களை எப்படிப் பாவிப்பது, துணி ஸ்திரி போடுதல் முதலான இன்னோரன்னவற்றைக் கற்றுக்கொடுத்தோம். மூன்று மாதப் பயிற்சியும் சுகாதார வசதிகளும், சத்துணவும் வழங்கப்பட்டதையடுத்து மறுபிறவி எடுத்தவர்களாக மாறிவிட்டார்கள்.

எங்களுடைய கருத்தியலுடன் ஒத்துப் போகக் கூடிய தோழிகளைத் தெரிவு செய்து, அவர்களின் வீடுகளுக்கு அப்பெண்களை வேலைக்கு அனுப்பி வைத்தோம். உணவு, உடை, தங்குமிடம், வங்கியில் மாதச் சம்பளம் என்று அவர்களது வாழ்க்கை மாற்றமடைந்துவிட்டது. ஆனாலும் இப்பணி கடல் நீரில் ஒரு துளி போன்றதே என்பது எனது ஆழ்ந்த மனக்கிலேசம். இப் பிரச்சினை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.


07. சமகால இலக்கியங்கள் மீதான தங்களது பார்வை எப்படி இருக்கிறது? 

பொதுவாக சமகால இலக்கியங்களில் தீவிரமான பார்வை எனக்கு இல்லை. சில காத்திரமான இலக்கியங்களை வாசித்து சிலருடன் விவாதிப்பேன். அவ்வளவே. சமூகவியல், மானுடவியல் என்ற கற்கை நெறிகளுக்குள் ஆழ்ந்து அவற்றை வாசிப்பதாலும், அரசியல் கட்டுரைகளை வாசிப்பதாலும் இலக்கிய ஆர்வமும் ஈடுபாடும் குறைந்து விட்டதோ என்று நான் அடிக்கடி சிந்திப்பதுண்டு. ஆனாலும் இலக்கிய ஆர்வத்தை இயன்ற மட்டும் வளர்த்தெடுக்கவே முயல்கின்றேன்.

நிறுவன நிர்வாகம், எழுத்து, சமூகப் பணி என்று ஓய்வின்றி வேலையில் ஈடுபட்டிருப்பதும் இதற்கு ஒரு காரணமாயிருக்கலாம். எனது ஆசை ஓய்வு பெற்றபின் இலக்கியத்தில் மூழ்கலாமென்பதே. அலை ஓய்ந்த பின் சூரிய நமஸ்காரம் போல்தான் இது ஆகிக் கொண்டேயிருக்கிறது. பலருடைய தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் எனக்கு திரும்பத் திரும்ப வந்து கொண்டே இருக்கிறது.


08. இலக்கியம், பெண்ணியம் சம்பந்தமான ஈடுபாட்டில் தனித்துவமான சிறப்பு உங்களுக்கு உண்டு. இவற்றில் உங்களுக்கே உரிய சிறப்பு என்ன என்பதைக் கூற முடியுமா? 

பெண்ணிலைவாதக் கருத்தியல்களை உள்ளடக்கிய இலக்கியங்களை ஆய்வு செய்வதும், பெண்களுக்கு எதிராக பழமைவாதக் கருத்துக்களை முன்வைக்கும் இலக்கியங்களுக்கு எதிர்வாதம் வைப்பதும் என்னுடைய சிறப்பு என நான் கருதுகின்றேன்.


09. பல்வேறுபட்ட இலக்கியத் துறைகளில் (கவிதை, சிறுகதை, நாவல், சிறுவர் இலக்கியம், பத்தி எழுத்து) தங்களுக்கு மிகவும் பிடித்த துறை எது? ஏன்?

எனக்கு மிகவும் பிடித்த துறைகளாக நாவல்களையும் சிறுகதைகளையும் கூறலாம். பொதுவாக பத்தி எழுத்து எம் நாட்டில் சிறப்பாக அமையாதபடியால் அவற்றை நான் தவிர்த்துக் கொள்வேன். கவிதை இலக்கியத்தைப் புரிந்து கொள்ள தனிப்பட்ட இலக்கியப் பயிற்சியும் ஆர்வமும் இருக்க வேண்டும். இவை இரண்டும் எனக்கு போதியளவில் இல்லாதபடியால் கவிதையில் எனது ஈடுபாடு குறைவாகவே இருக்கும். ஆனாலும் கவிதைகளை நான் முற்றாக விலக்கிவிடுவதில்லை. ஆழியாள், அவ்வை, குட்டிரேவதி, நுஃமான் போன்றோரின் கவிதைகளை விரும்பிப் படித்து ரசிப்பேன்.


10. இலங்கையில் பெண்களின் சார்பிலக்கியத்தில் முழுமையாக ஈடுபடும் உங்களுக்குப் பிடித்தவர் எனக் கருதப்படுபவர் யார்? ஏன்?

இலங்கையில் பெண்ணிலைவாதக் கருத்துக்களை உள்டக்கிய இலக்கியங்கள் மிகக் குறைவாகவே இருக்கின்றன. தேவகௌரியின் 'கற்பு' என்ற சிறுகதை என்னை மிகவும் கவர்ந்தது. ஒளவை, ஆழியாள் போன்றோரின் கவிதைகளும் என்னைப் பெரிதும் ஈர்த்தன. பவானி ஆழ்வார்ப்பிள்ளையின் சிறுகதைகள் பெண்ணிலைவாத இலக்கியத்திற்கு நம்நாட்டில் வித்திட்டவை என்று நான் கருதுகின்றேன்.

இவற்றை நான் குறிப்பிடும் பொழுது சிலர் விடுபட்டிருக்கலாம். சிலரது இலக்கியங்கள் என் கண்ணில் படாமல் போயிருக்கலாம். ஆகவே இக் கேள்வியின் பதில் பூரணத்துவம் அடையவில்லை என்பதை நான் உணர்கிறேன்.


11. இலங்கையில் இலக்கிய முயற்சிகளில் ஈடுபட்டுவரும் பெண் எழுத்தாளர்கள் பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?

இலங்கையில் இலக்கிய முயற்சிகளில் ஈடுபட்டு வரும் பெண் எழுத்தாளர்கள் இன்னும் பல படிகளைத் தாண்ட வேண்டும் என்பதே என் கருத்து.


12. தற்காலப் பெண் படைப்பாளிகள் எதிர்நோக்கும் சவால்கள் என்று எதனைக் கருதுகிறீர்கள்? 

பெண் படைப்பாளிகள் எதிர்நோக்கும் சவால்கள் எவை என்பது என்னைவிட பெண் படைப்பாளிகளுக்கே நன்றாகத் தெரியும். ஆதலால் அதனை அப்படைப்பாளிகளிடமே கேட்க வேண்டும். அதேவேளை, இலங்கையின் தற்காலப் போக்கு அவர்களுக்கு மிகப்பெரும் சவால்களை உண்டாக்கியிருக்கும் என நான் கருதவில்லை.


13. மொழி, கருத்து - இலக்கியத்தில் முக்கிய பங்கைப் பெறுவது எதுவென நீங்கள் கருதுகிறீர்கள்?

இலக்கியத்தில் முக்கிய பங்கைப் பெறுவது எது எனத் தர்க்க ரீதியாக நிர்ணயித்துக் கூற முடியாது. கருத்து எவ்வளவு முக்கியமோ அந்தக் கருத்தைக் கொண்டு செல்லவும், வாசிப்போரின் மனதில் அதைப் பதிய வைக்கவும் தேர்தெடுக்கும் மொழியும் எடுத்துச் செல்லும் நடையும் முக்கியமானவை. ஒன்றில் இருந்து ஒன்றைப் பிரிக்க முடியாது. மொழிப் பிரயோகம், நடை, கதையின் கருத்தியலை அண்டிய கரு எல்லாம் ஒன்றிணைந்தால் அவ்விலக்கியம் சுவை பெறும். கருத்தின் ஆழம் வாசகர் மனங்களைச் சிந்திக்கத் தூண்டும்.


14. நீங்கள் இதுவரை வெளியிட்ட நூல்கள் இருப்பின் அதுப்பற்றிக் குறிப்பிடுங்கள்?

நான் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளேன். நான் இதுவரையில் 14 நூல்களை ஆங்கிலத்திலும், 09 நூல்களை தமிழிலும் எழுதியுள்ளேன். சில ஆங்கில நூல்களை ஆசிரியராக இருந்து பதிப்பித்துமுள்ளேன்.


15. எதிர்காலத்தில் எவ்வகையான நூல்களை வெளியிட உத்தேசம் கொண்டுள்ளீர்கள்?

எதிர்கால நூல்களை அந்தந்தக் கால எல்லைகள் நிர்ணயிக்கும் என்பதே எனது கருத்து. ஆனாலும் தற்போது யாழ்ப்பாணத்தில் நிலவும் சாதி, வர்க்க பேதங்கள் அவற்றினுடாக வெளிப்படும் பெண்களது நிலைப்பாடு என்ன என்பதை ஆய்வு செய்ய எண்ணியுள்ளேன்.


16. இலக்கியவாதிகளின் எழுத்துக்கும் வாழ்க்கைக்கும் சம்பந்தம் இருக்கிறது என்று நினைக்கிறீர்களா?

இலக்கியவாதிகள் ஒரு நிலைப்பட்ட உடலை மட்டும் கொண்டுள்ளவர்கள் அல்ல. அவர்களும் உணர்ச்சிகள், ஆவேசங்கள், கோபதாபங்கள் என்ற பல வகைப்பட்ட மனநிலைகளை உடையவர்களே. அவர்களுடைய வாழ்க்கை அனுபவங்கள் சில அவர்களுக்கு முக்கியமாகப்படலாம். அவர்களது வாழ்க்கையை நிர்ணயித்த அம்சங்கள் ஆழப்பதிந்து வெளிப்பட வடிகால் தேடுபவைகளாக இருப்பதும் சகஜமே.

பேனா எடுத்து எழுதும் பொழுது இவற்றின் பிரதிபலிப்பு கட்டாயமாக இலக்கியத்தில் வந்து விழவே செய்யும். எல்லாமே பிரதிபலிக்காமல் விட்டாலும் எழுதும் நேரத்தில் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்திய உணர்ச்சிகள் எழுத்தில் பிரவகிக்கும். இது தடுக்க முடியாத ஒரு பிரவாகம். இதை நாம் கூறும் பொழுது இலக்கியவாதிகள் எழுதும் எழுத்துக்கும் அவர்களது வாழ்க்கை நிலைக்கும் நேரடியாக தொடர்பு இருக்கிறதென்று இலக்கியவாதிகளை கொச்சைப்படுத்தும் வாக்குமூலங்கள் நிராகரிக்கப்பட வேண்டும் என்தையும் கூறியே தீர வேண்டும்.


17. இலக்கியத்தினூடாக நல்ல கருத்துக்களை வெளிக்கொணர்ந்து சமூகத்தில் எவ்வகையான மாற்றங்களை ஏற்படுத்தலாம் எனக் கருதுகிறீர்கள்?

இலக்கியம் வாசகர்களை சிந்திக்கத் தூண்டுகிறது. வாசகர்களது எண்ணங்களையும் கருத்துக்களையும் பாதிப்பவையாக நல்ல இலக்கியங்கள் இயக்கம் கொள்கின்றன. அந்நிலையில் சமூகத்தில் நிலவும் அக்கிரமங்களையும் அநீதிகளையும் இலக்கியங்கள் பாடுபொருளாகக் கொள்ளும் பொழுது வாசகர்களை தன்னுணர்ச்சி நிலையில் மாற்றம் கொள்ள வைக்கிறது.

சமூகத்தில் அநீதியும் அக்கிரமமும் ஒரு அம்சமாக இருக்கையில் வாசகர்கள் அவற்றை பொய் என்று கருதமாட்டார்கள் என்று நினைக்கிறேன். இலக்கியம் அவற்றை அகற்ற முயற்சிக்கலாம், குறைகளை நிறைவு செய்யலாம், இயக்கம் கொள்ளச் செய்யலாம். இவை கட்டாயமாக நடைபெறும் என்று கூற முடியாவிட்டாலும் நடக்கலாம் என்று எதிர்பார்க்கலாம். நடக்கிறது என்றும் கருதலாம். பப்லோ பிகாசோ (Pயடிடழ Piஉயளளழ) கூறிய ஒரு கருத்தை இங்கு நான் இணைக்க விரும்புகிறேன். கலை என்பது பொய்மையானது. அப்பொய் உங்களுக்கு உண்மையை உணர்த்துகிறது. Art is a lie that makes us realize the truth என்பதின் மொழி பெயர்ப்பே இது.


18. இன்றைய எழுத்தாளர்களுக்கு தாங்கள் கூறும் அறிவுரை என்ன?

எழுத்தாளர்களுக்கு அறிவுரை கூறும் நிலையில் நான் இல்லை. எழுத்தாளர்களுக்கு அவர்களின் வாசகர்கள் விமர்சனங்கள் மூலம் முன்வைக்கும் கருத்துக்களே அறிவுரையாகும்.

19. இறுதியாக என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?

உலகில் நடக்கும் சம்பவங்களையும் போக்குகளையும் கண்டும் கேட்டும் அவதானிக்கும் போது எனக்கு தோன்றுவது ஒரு விரக்தி மனப்பான்மையே. கோட்பாடுகளை மேற்கொண்டு, புரிந்து பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முடியாதென்பதை நான் இப்போது உணர்ந்து கொண்டேன். கோட்பாடுகள் விரிய வேண்டும், அகன்று நீள வேண்டும்.

சில மக்கள் குழுக்களின் வக்கிர மனப்பான்மைகளை நாம் எப்படி விளங்கிக் கொள்வது. சிறு பெண்பிள்ளைகள் மீதான பாலியல் வன்முறைகள், இந்து, இஸ்லாம், பௌத்தம் என்ற மதங்களின் பெயரில் நடக்கும் கதிகலங்க வைக்கும் வன்முறைகள், பெற்றோரை நடு வீதியில் விட்டுச் செல்லும் புத்திரச் செல்வங்கள் இப்படியாக தொடரும் வன்முறைகளுக்கு தீர்வுகள் உண்டா? இவற்றுக்கான காரணங்கள் யாது? கேள்விகளுடன் நிறுத்திக் கொள்கிறேன்!!!

நேர்கண்டவர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

No comments:

Post a Comment